'ஜன்னலில் அமர்ந்து செல்ஃபி எடுத்தபோது விபரீதம்...' '15 நிமிஷம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு அலறியுள்ளார், கடைசியில்...' வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 13, 2020 12:26 PM

ரஷ்யாவில் தன்னுடைய வீட்டின் ஜன்னலில் இருந்து காலியாக இருக்கும் சாலைகளை செல்ஃபி எடுக்க முயன்றபோது  தவறி விழுந்த இளைஞரை போலீசார் காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

A person hung up on the window sideways and took a selfie

ஒரு சில பகுதிகளை தவிர உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அமுலில் உள்ளது. இம்மாதிரியான நேரங்களில் ஒரு சிலர் தங்களுடைய அதிகப் பிரசங்கிதனத்தால் தொல்லையில் மாட்டிக்கொள்வதும் உண்டு. அதுபோல ரஷ்யாவிலும் ஒரு இளைஞர் இவ்வாறான ஆபத்தில் மாட்டிகொண்டுள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோ புறநகர் பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வருவது இல்லை. அதனால் வெறிச்சோடிக் காணப்படும் வீதிகளை அன்டோன் கோஸ்லாவ் என்ற இளைஞர் தன்னுடன் சேர்ந்து காலியாக காணப்படும் வீதிகளையும் செல்ஃபி எடுக்க நினைத்துள்ளார். இதனால் தன் வீட்டின் ஜன்னலில் அமர்ந்த அவருக்கு தீடீரென வழுக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிடிமானம் நழுவியதில் 150 அடி உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.

சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக அந்தரத்தில் தொங்கியவரே அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் எல்லோரும் நல்ல முறையில் வீட்டிற்குள் இருப்பதால் இவரது அலறல் சப்தம் யார் காதிலும் விழவில்லை.

இந்நிலையில் அப்பகுதியை கண்காணிக்க வந்த போலீசார் இந்த இளைஞர் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து, அடுக்குமாடி கட்டிடத்திற்குள் ஏறி அவரை பத்திரமாக மீட்டனர்.

 

Tags : #SELFIE