விபரீத 'செல்பி' ஆசை... ஆக்ரோஷத்தில் பைக்கை 'கீழே' சாய்த்த யானை... நூலிழையில் தப்பிய இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Dec 13, 2019 12:38 AM

யானையுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்களை, அந்த யானை தாக்க முயற்சித்த சம்பவம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் பகுதியில் நடந்துள்ளது.

Lorry Driver saves youths life from wild elephant, details

கடந்த சில நாட்களாக கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் இரவுகளில் ஒற்றை காட்டுயானை ஒன்று சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோத்தகிரி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர்,எ அந்த யானையை பார்த்ததும் பைக்கை நிறுத்திவிட்டு, செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

அதுவரை அமைதியாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த யானை திடீரென ஆக்ரோஷமாகி அவர்களின் பைக்கை கீழே தள்ளி, அவர்களை தாக்க முயற்சி செய்தது. நல்லவேளையாக அந்த இளைஞர்களின் பின்னால் வந்த டிப்பர் லாரி டிரைவர் சாமர்த்தியமாக அந்த இளைஞர்களை மறைக்கும் வகையில் லாரியை நிறுத்தினார். இளைஞர்கள் லாரியின் மறைவில் மறைந்து கொண்டனர்.

லாரியை பார்த்ததும் பைக்கை மட்டும் கீழே சாய்த்து விட்டு யானை சென்று விட்டது. இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர்.

Tags : #BIKERS #SELFIE