“முகத்தோடு முகம் வைத்து செல்ஃபி!”.. “திடீரென திரும்பிய வளர்ப்பு நாய்!”.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாப கதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 17, 2020 02:00 PM

செல்லப் பிராணிகளுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி, இணையத்தில் வெளிவந்ததை அடுத்து பலரையும் அதிர வைத்துள்ளது.

pet dog bites teen girls face while trying to take selfie

அர்ஜெண்டினாவில் வசித்து வரும் 17 வயது இளம் பெண் லாரா சன்சோன், தனது ஜெர்மன் ஷெப்பர்ட் செல்லப் பிராணியான வளர்ப்பு நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் சற்றும் எதிர்பாராதபடி அந்த வளர்ப்பு நாய் அவரை ஆழமாக கடித்துவிட்டது.

தனது வளர்ப்பு நாயின் முகத்தோடு முகம் வைத்து செல்ஃபி எடுக்க முயன்ற லாரா சன்சோனின் ஒரு பக்க முகத்தை, அந்த நாய் ஆழமாக கடித்துவிட்டதால் படுகாயமடைந்த லாரா சன்சோனுக்கு உள், வெளி என 40 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுபற்றி பேசியுள்ள லாரா, தனது நாய் எதற்காக இவ்விதம் நடந்துகொண்டது என தெரிவித்துள்ளார். எனினும் வளர்ப்பு நாயாகவே இருந்தாலும் கவனமாக நடந்துகொள்ள வேண்டியுள்ளது என பலரும் அட்வைஸ் செய்துள்ளனர்.

Tags : #SELFIE