'கடைசில' என்னையும் அத பண்ண 'வச்சிட்டீங்களே'... 'செலவுதான்' இருந்தாலும் 'அமெரிக்கர்கள்' எல்லோரும் இதை 'பண்ணிக்கோங்க'... அதிபர் 'ட்ரம்ப்' புதிய 'மசோதா'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தொட்டுள்ள நிலையில், அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தானும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்திட நிதியும் ஒத்துக்கினார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு கவலையை அளிக்கிறது. இது யாருடைய தவறும் இல்லை. இதனை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. இனி உயிரிழப்பை குறைக்கும் நடவடிக்கையாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து அமெரிக்கர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்கு பணம் செலவாகும் எனினும் இலவசம் தான். நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா பற்றி அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டியதில்லை" எனக் குறிப்பிட்டார்.
