“நோய் வந்தா கடவுள்கிட்டதான் வேண்ட முடியும்!... கோவிலுக்கு வராதேனு சொன்னா.. பக்தியா? பகுத்தறிவா? ஆன்மீகமா?”.. ட்விட்டரில் ஆ.ராசா கேள்வி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார நலத்துறை அறிவித்துள்ளது.

தவிர டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் விளைவும், தாக்கமும் இந்த நிலையில் இருக்க பல இடங்களில் மக்கள் கோயிலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூட்டமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கோயில் நிர்வாகங்களின் தரப்பில் அறிவுறுத்தல்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மக்களின் கடவுள் நம்பிக்கை குறித்த ஆ. ராசாவின் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது. திமுக எம்,பியான ஆ.ராசா, இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? ’
நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்டமுடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா? #coronavirus
— A RAJA (@dmk_raja) March 13, 2020
என்று பதிவிட்டுள்ளார்.
