‘சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தம்!’ .. ‘கொரோனா எதிரொலியால்’ மத்திய அரசு அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா விசாக்களும் தற்காலிமாக நிறுத்தி வைக்கப் படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 13-ஆம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்த நடவடிக்கை செயல்பாட்டில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தவிர சீனா, இத்தாலி, ஈரான், தென்கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு பயணம் மேற்கொண்ட பயணிகளும் மற்றும் அங்கிருந்து இந்தியா வந்த பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட நாடுகளுக்கு விசா வழங்குவதையும் மத்திய அரசு ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், இக்குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்பட்டு அவர்கள் இந்தியாவுக்கு உள்ளே நுழையாமல் இருந்தால் அதுவும் ரத்து செய்யப்படும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா வீசாவில் விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்வதும் உள்நுழைவதும் கூட கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
