‘யார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்னு கண்டுபுடிக்க சொல்லியிருக்கேன்!’.. இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சரை தாக்கிய கொரோனா!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் இங்கிலாந்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 363 பேர் ஆளாகி உள்ளனர். அவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துமுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நடைன் டோரிஸ் ரத்த மாதிரி சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்திருக்கும் அமைச்சர் நடைன் டோரிஸ் தற்போது தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், விரைவில் குணமாகும் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் சந்தித்த யாரிடம் இருந்து தனக்கு கொரோனா பரவியிருக்கக் கூடும் என்பதை கண்டறியச் சொல்லி கேட்டுள்ளதாகவும், செவிலியராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது 62 வயதாகும், தான் இப்போது மோசமான நிலையில் இருப்பதாகவும், தன் கவலை எல்லாம் 84 வயதாகும் தன் அம்மாவைப் பற்றிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
