'உனக்கு மட்டும் எப்படி சரக்கு கிடைச்சுது'...'டேய் மச்சி ஒரே ஒரு சிப் கொடுடா'... 'பீர் தர மறுத்த நண்பன்'... நடந்து முடிந்த பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடி என்று வரும்போது உயிருக்கு உயிராகப் பழகிய நண்பன் என்று கூட பாராமல் இளைஞர் செய்த கொடூரம் பலரையும் அதிர்ச்சி செய்துள்ளது.

மும்பை ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் டிராவிட். இவரும் இவரது சகோதான் விஜய்யும் பீர் வாங்கி குடித்துள்ளார்கள். இதனை அறிந்த அவர்களது நண்பன் சோனு சகோதரர்களின் வீட்டிற்கு வந்துள்ளார். எனக்கு பீர் கிடைக்கவே இல்லை. உங்களுக்கு மட்டும் எப்படிக் கிடைத்தது, எனக் கேட்டுக்கொண்டு எனக்குக் கொஞ்சம் பீர் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். ஆனால் சகோதரர்கள் இருவரும் எங்களிடம் குறைந்த அளவில் தான் பீர் உள்ளது எனவே தரமுடியாது என மறுத்துள்ளார்.
இதனால் சோனு, அஜய்யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அஜய்யின் சகோதரர் இருவரையும் விலகி விட முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சோனு, ஐஸ் எடுக்கப் பயன்படும் முள் போன்ற கத்தியை எடுத்து இருவரையும் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதனால் இருவரும் அலறி துடித்த நிலையில், மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் ஓடி வந்தார்கள். இதனைப் பார்த்த சோனு அங்கிருந்து தப்பி ஓடினார்.
படுகாயமடைந்த சகோதரர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அதில் அஜய் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கப் பீர்க்காக நண்பனையே குத்தி கொலை செய்த சோனுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்
