VIDEO: 'கொல பட்டினியா இருந்துருக்கும் போல...' 'கார லாக் பண்ணல...' ஆடு செஞ்ச வேலைய பார்த்து ஷாக் ஆன போலீஸ் ஆபிசர்...' - வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் ஆடு ஒன்று போலீசாரின் காருக்குள் இருந்த காவல் ஆவணங்களை தின்னும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் டக்ளஸில் காவல்துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் விசாரணைக்காக ஜார்ஜியா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அப்போது விசாரணை மேற்கொள்ளும் வீட்டிற்கு செல்லும் போது தனது காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.
வேலை முடிந்து வெளியே வந்த காவல் அதிகாரி காரில் நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அப்போது ஒரு ஆடு அவரின் காரில் இருந்துகொண்டு, காவல் ஆவணங்களை எல்லாம் மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்று கத்திய பெண் காவல்துறை அதிகாரி ஆட்டை விரட்ட முயற்சித்தும் ஆடு சிறிதளவு கூட நகரவில்லை.
மேலும் ஆடு உள்ளே இருக்கும் காகிதங்களை மெல்லும் வேலையிலேயே ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவமானது போலீஸ் அதிகாரியின் உடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இதைப்பார்த்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய பெண் காவல்துறை அதிகாரி, நான் தினமும் பல வீடுகளுக்கு விசாரணைக்கு செல்வேன். எப்போதும் லாக் செய்வதில்லை அதேபோல் தான் இன்றும் சென்றேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக காருக்குள் ஆடு புகுந்ததுள்ளது, அதுமட்டுமில்லாமல் காவல் ஆவணங்களை எல்லாம் தின்று விட்டது' எனக்கூறியுள்ளார்.
ஃபேஸ்புக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே வைரலாகத் தொடங்கிவிட்டது. சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் பெற்றுள்ளது, 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்