‘சகோதரியின் நண்பர்.. நண்பரின் சகோதரர்.. இருவருடன் தொடர்பு!’.. ‘மனைவி’ போட்ட ‘ஸ்கெட்ச்!’.. கணவரின் ‘இறுதிச்சடங்கில்’ நடந்த ‘ட்விஸ்ட்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 24, 2020 03:42 PM

இந்தியாவில் கணவரை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்க விட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Wife kills husband after knowing that he is 20 yrs elder than her age

புதுடில்லியை சேர்ந்தவர் கிஷன் தியகி. இவரது மனைவி பிரியங்கா. 50 வயதான கிஷன் தியகியை கடந்த 18ஆம் தேதி பிரியங்கா மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே அங்கிருந்து உறவினர்களிடம் கிஷனுக்கு ஃபுட் பாய்சன் ஆகி விட்டதாக கூறியுள்ளார் பிரியங்கா. ஆனால் மருத்துவர்கள் கிஷன் கழுத்தில் காயம் இருப்பதாக கூறியதையடுத்து அவர் மன அழுத்தத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரியங்கா தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு அளித்த புகாரின் பேரில் அவர்கள் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்தனர்.

அதே சமயம் இறுதிச்சடங்கில் பிரியங்கா அழாமல், எந்த சலனமும் இல்லாமல், மிகவும் இயல்பாக நடந்து கொண்டது அங்கிருந்தவர்களை சந்தேகத்திற்கு தூண்டியது. இதனை அடுத்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் இரண்டு ஆண் நண்பருடன் சேர்ந்து தனது கணவரை கொன்றதை பிரியங்கா ஒப்புக்கொண்டார். பிரியங்கா அளித்த வாக்குமூலத்தின்படி கிஷன் தனக்கு சமமான வயதுடையவர் என நினைத்து மணந்து கொண்டதாகவும் ஆனால் திருமணத்திற்குப் பின்னர்தான், அவர் தன்னை விட 20 வயது இருபது வயது மூத்தவர் எனவும் தனக்கு தெரிய வந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்ததாகவும், அதே சமயத்தில் சகோதரியின் நண்பர் பர்மா என்பவருடனும், அவர் மூலமாக, அவரது சகோதரர் கரண் என்பவருடனும், கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து தனது உறவினர் என பொய்யாகக் கூறி பிரியங்கா, கரணை தன் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார். இந்த சூழலில்தான் பிரியங்கா, பர்மா, கரண் மூன்று பேரும் சேர்ந்து கிஷனின் கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பிரியங்கா மற்றும் பர்மாவை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக இருக்கும் கரணை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Wife kills husband after knowing that he is 20 yrs elder than her age | India News.