'மகளை தேடிச்சென்றபோது'... 'கதவை திறந்து ஓடிய நபர்'... 'அதிர்ந்துபோன தாய் உள்ளே பார்க்க'... 'சிறுமி கிடந்த பதறவைக்கும் கோலம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரகாண்டில் 11 வயது சிறுமியை காவலரே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு குடியிருப்பு ஒன்றில் ஒரு மாற்றுத்திறனாளி தம்பதி அவர்களுடைய 11 வயது மகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்த கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தாய் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது பலமுறை வெளியிலிருந்து கூப்பிட்டும் மகள் கதவை திறக்காததால் அவர் கதவை திறக்க முயன்றுள்ளார். கதவு உள்பக்கம் அடைக்கப்பட்டிருந்ததால் அவர் கூச்சல் போட, உள்ளிருந்து கதவை திறந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய நபர் அதே பகுதியை சேர்ந்த காவலர் சஞ்சிவ் ஜுகாடி என அறிந்த தாய் உள்ளே ஒடிச் சென்று மகளைப் பார்த்துள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்த மகளைப் பார்த்து அவர் கதறி அழுதுள்ளார்.
பின்னர் மகளுடன் வீடு திரும்பிய அவர் அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க, இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சிவ் ஜுகாடியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
