'குழந்தைங்க கண்ணு முன்னால வச்சு அப்பாவ சுட்டாங்க...' 'கறுப்பின இளைஞரை 7 தடவை சூட் செய்த போலீசார்...' - மீண்டும் அமெரிக்காவில் நடந்தேறிய பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த மே மாதம் அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட அப்பாவி ஜார்ஜ் ஃபிலாய்ட் போலவே தற்போது மேலும் ஒரு கொடூர செயல் நடந்தேறியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு மத்திய பகுதியான விஸ்கான்சின், கெனோஷா என்ற பகுதியில் போலீசாரால் ஜேக்கப் பிளேக் என்ற கறுப்பினத்தை சேர்ந்த 29 வயது இளைஞர் போலீசாரால் சுடப்பட்டுள்ளார்.
கெனோஷா காவல்துறையை சேர்ந்த வெள்ளையின காவல் அதிகாரிகள் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணியளவில் ஜேக்கப் பிளேக் என்பவரை சுட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளிவந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட ஜேக்கப் பிளேக் ஒரு காரை நோக்கி நடந்து செல்கிறார். அப்போது, அவரை பின்தொடர்ந்து செல்லும் இரண்டு காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், ஜேக்கப் பிளேக் காரை துறந்து உள்ளே நுழையும் போது அவரின் சட்டையை பிடித்து இழுக்கிறார். மேலும் சுமார் 7 முறை ஜேக்கப் பிளேக் அவர்களை சுடும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் ஜேக்கப் பிளேக் ஏறிய காரில் அவரின் 3 ஆண் குழந்தைகள் இருந்ததாகவும், குழந்தைகளின் கண்முன்னே தந்தையை சுட்ட சம்பவம் மீண்டும் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதையடுத்து கெனோஷா காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பிளேக்கை உடனடியாக காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். துப்பாக்கிச் சூடு குறித்த விளக்கங்கள் காவல்துறையினரால் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, 'போலீசார் தன் தந்தையை சுட்டதை அவர்கள் கண்டு கொண்டிருந்தனர்'
'காவல் துறையின் பணி மக்களை காப்பதே, அவர்களை துன்புறுத்துவது இல்லை. எங்கள் குழந்தைகள் இதைவிட நல்ல இடத்தில் வாழ தகுதியுடையவர்கள்' என பிளேக்கின் குழந்தைகளின் மனநிலை குறித்து ட்விட்டரில் தன் கருத்தை பதிவு செய்துள்ளார் திரு க்ரம்ப் ட்வீட்.
மீண்டும் நடந்த இந்த கொடூர சம்பவத்தால் கெனோஷா மாவட்டத்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பல விளைவுகளை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.