'என்னை சிதைச்சிட்டாங்கன்னு ஓடி வந்த பெண்'... 'தூக்கி வாரி போட வைத்த அதிகாரியின் ஒற்றை கேள்வி'... அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் அளிக்க ஓடி வந்த சிறுமியிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ககாடியோ பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இறந்து விட்ட நிலையில், அவர் தனது தாய் வழி பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் 15 சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த உள்ளூர் ரவுடி ஒருவன் அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும் அச்சிறுமி மீது மதுபானம் ஊற்றியதுடன், அவரின் ஆடைகளைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஊர்மக்கள் அந்த சிறுமியை அங்கிருந்து மீட்டார்கள். இதுகுறித்து புகார் அளிப்பதற்காக ககாடியோ காவல் நிலையம் சென்ற சிறுமியிடம், அங்கிருந்த காவலர் ஒருவர் “பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு நீ அழகாக இல்லை”என்று கூறியதாக அந்த சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறுமியின் புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோன்று உத்தரப்பிரதேசத்திலுள்ள கோவிந்த் நகர் காவல் நிலையத்திற்கு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகார் அளிக்கச் சென்ற சிறுமியிடம் “ தனக்கு முன்னாள் நீ நடனமாடினால் வழக்குப் பதிவு செய்வேன்” என்று அந்த காவல்நிலைய அதிகாரி கூறியதாகச் சிறுமியின் தாயார் புகார் தெரிவித்துள்ள மற்றொரு சம்பவமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
