'10 வருஷமா இந்த கொடுமை தான்'... '143 பேர் மீது இளம்பெண் கொடுத்த 42 பக்க புகார்'... 'திக்குமுக்காடி உறைந்த போலீசார்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானாவில் இளம்பெண் ஒருவர் தான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில், "எனக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் என்னுடைய கணவரின் குடும்ப உறுப்பினர்கள் 20 பேரால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். அதனால் திருமணம் நடந்த ஒரு வருடத்திலேயே எங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது.
பின்னர் விவாகரத்து ஆனதும் என்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று, அங்கு தங்கியிருந்து மேற்படிப்பை தொடர்ந்தேன். அப்போதும் மாணவர்கள், அரசியல்வாதிகள், வக்கீல்கள், குடும்ப உறுப்பினர்கள், ஊடக துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் என 139 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன். மேலும் அப்போது உடலில் சிகரெட் நெருப்பால் சூடு வைத்து, விஷயத்தை போலீசில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்னை மிரட்டினார்கள். அதற்கு பயந்தே நான் இதுவரை புகார் எதுவும் அளிக்காமல் இருந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். பஞ்சாகுட்டா காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்துள்ள புகார் போலீசாரை உறையச் செய்துள்ள நிலையில், சுமார் 42 பக்கத்திற்கு அந்தப் புகாருக்கு முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த பகீர் புகார் குறித்துப் பேசியுள்ள போலீசார், "பாதிக்கப்பட்ட பெண் 2009ஆம் ஆண்டிலிருந்து பலமுறை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், பல கொடுமைகளை சந்தித்துள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். ஆனால் கொலை மிரட்டலுக்கு பயந்து புகார் கொடுக்காமல் இருந்ததாகக் கூறியுள்ளார்'' எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
