‘இப்படி’ ஒரு காரணத்துக்காக ‘துருக்கி’ பயணம்?.. கைதான ‘இளம்பெண்’!.. ‘வெளியான’ அதிர்ச்சி ‘காரணங்கள்’!
முகப்பு > செய்திகள் > உலகம்கனடாவின் டொரோண்டாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Haleema Mustafa என்கிற அந்தப்பெண் தீவிரவாத குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். அதாவது தீவிரவாத குழு ஒன்றில் இணைவதற்காக தன்னுடைய கணவருடன் கனடாவில் இருந்து வெளியேறியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் கணவர் , Ikar Mao என்பவருடன் துருக்கிக்கு பயணித்த நிலையில் சிரியாவில் உள்ள தீவிரவாத குழுவில் இணைவதற்காக சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக Ikar Mao மீது ஏற்கனவே இரண்டு தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதும் ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டு அவர் காவலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில்தான் கைது செய்யப்பட்டுள்ள Haleema Mustafa கனடா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவிருக்கிறார்.

மற்ற செய்திகள்
