‘நல்லா நியாபகம் இருக்கு!.. இவர எங்கயோ பாத்துருக்கேன்’.. கொரோனா நேரத்திலும் 'இந்த மாதிரி ஆளுகளுக்கு' அடித்த ஜாக்பாட்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒருவரை பார்த்ததும், பார்த்த மாத்திரத்திலேயே, இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.. எங்கே பார்த்தோம்... என்று சரியாக நினைவுகூர்ந்து துல்லியமாக அவர் முகத்தை வைத்து அந்த நபரை கண்டுபிடிக்கும் ஆற்றல் கொண்டவர்களுக்கு சுவிஸ் போலீஸார் ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளனர்.
ஒரு முறை மட்டுமே ஒருவரை பார்த்தாலும், எத்தனை வருடங்கள் கழித்தும் துல்லியமாக அடையாளம் சொல்வதுடன், குழந்தைகளாக இருக்கும்போது பார்த்தவர்களை கூட நன்றாக வளர்ந்த பின்னரும் சரியாக அடையாளம் காட்டும் இதுபோன்ற அநாயச திறன் கொண்ட இவர்களை சுவிட்சர்லாந்தின் சூரிச் போலீஸார் (Zurich police)'Super Recognisers' என்று அழைக்கின்றனர்.
இதுபோன்ற நபர்களை வைத்து போலீஸுக்கு டிமிக்கு கொடுக்கும் பல வருட குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கலாம் என்பதால் இவர்களுக்கு பணிகளை வழங்க சூரிச் போலீஸார் முன்வந்துள்ளனர். இப்படியான 'Super Recognisers' லண்டன் மெட்ரோபொலிட்டன் போலீஸ் மற்றும் ஜெர்மன் போலீஸ் பிரிவுகளில் ஏற்கனவே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.