‘பெற்ற மகளைக் கடத்தி.. கட்டிவைத்து.. போதை மருந்து கொடுத்த கொடூர தாய்!’.. 'நடுங்கவைத்த' சம்பவம்.. நீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் பெற்ற மகளைக் கடத்தி, போதை மருந்து கொடுத்த கொடூர தாய் சில வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

தற்போது 21 வயதாகும் பெண், சிறுமியாக இருந்தபோது அவரது தாயாரான Karen Matthews தனது மகளை தனது காதலனின் நண்பரான Michael donovanனுடன் சேர்ந்து பணத்துக்காக கடத்தினார். மேலும், மைக்கேல் வீட்டின் படுக்கைக்கு அடியில் 3 வாரங்கள் தன் மகளை கட்டிவைத்து போதை மருந்துகளைக் கொடுத்துள்ளார் Karen.
பின்னர் இதனை கண்டுபிடித்த போலீஸார் Karen Matthews மற்றும் Michael donovan இருவரையும் நீதிமன்றத்தின் முன்னால் ஆஜர்படுத்தியதை அடுத்து இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 21 வயதான Karen Matthews-ன் உண்மையான பெயர் மாற்றப்பட்டு புதிய பெயரே இனி அவருக்கு வழங்கப்படும் என்றும், அவரது பாதுகாப்பு கருதி இத்தகைய முடிவு எடுக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரிகளுக்கும் இதே போல் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
