'அழகான காலை.. அமைதியான சாலை'.. இமைக்கும் நொடியில் நிகழ்ந்த கோரம்.. உயிர் பலி.. படுகாயம்.. பொதுமக்களுக்கு நேர்ந்த கதி.. சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் பகுதி அதிக மக்கள் நெருக்கடி கொண்ட இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படுகிறது.

இங்குதான் அதிகாலையில் பெரிய அளவில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. பிர்மிங்ஹாம் பகுதியில் உள்ள சிட்டி சென்டர் என்கிற இடத்தில் சாலையில் சென்ற பொது மக்கள் மீது திடீரென மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால், அங்கு நிலைமை மோசமானதாக மாறியதை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே இந்த கத்திக்குத்துவில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இளம் பெண்கள் உட்பட 7 பேருக்கு மேல் கத்தி குத்து காரணமாக பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், தற்போது இந்த தாக்குதலைச் செய்தவர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில சிக்கியுள்ளதாகவும், அவற்றை ஆய்வு செய்ததன் பிறகே முழுமையாக எதையும் சொல்ல முடியும் என்றும் இங்கிலாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
