'சுத்தியலால் மனைவியின் தலையில்'.. 'ஓங்கி அடித்துக் கொன்ற கணவர்!'... 'கூலாக' சொன்ன 'வியப்பில் ஆழ்த்தும்' காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்எகிப்தில் தூக்கத்தில் இருந்த தமது மனைவியை சுத்தியலால் தலையில் தாக்கிக் கொன்ற கணவர் போலீஸில் சிக்கியுள்ளார்.

எகிப்தில் 51 வயதான கயானா நாட்டவர் ஒருவர் தமது 42 வயதான மனைவியை தூங்கிக் கொண்டிருக்கும்போது சுத்தியலால் தாக்கிக் கொலை செய்துள்ளார். காரணம் அவருடன் வாழ்ந்த வாழ்க்கை போர் அடிக்கிறது என்று கூறியுள்ளார்.
எகிப்தின் siwa என்கிற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவியை கொல்ல திட்டமிட்ட அந்த கணவர், அதற்கான காரணத்தையும் தற்போது போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் முக்கிய நாள் என்பதால் இறந்துபோனவர்களுக்கு மன்னிப்பு கோருவதற்கான இறுதி பிரார்த்தனை பலர் செய்வார்கள் என்றும் அதன் நிமித்தமாக இறந்த தனது மனைவியை சில மணிநேரத்துக்குள் குளிப்பாட்ட எண்ணியுள்ளார் அந்த கணவர்.
இதற்கென அந்த கிராமத்தைச் சேர்ந்த சில பெண்களை அழைக்க, அவர்களோ சுகாதார அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி சடலத்தை குளிப்பாட்ட முடியாது என்று சொன்னதால், அந்த நபர் சுகாதார அதிகாரிகளை வரவழைக்க, அவர்கள் வந்த பின், சடலத்தின் தலையில் இருந்த ரத்தக் காயத்தை பார்த்ததும் அதிர்ந்து போய் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்துவந்த போலீஸார் அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் தன் மனைவியை போர், அவருடன் வாழ்ந்து அடிக்கிறது என்று திட்டமிட்டு கொலை செய்துள்ள சம்பவத்தை ஒத்துக்கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அதிரவைத்துள்ளது.

மற்ற செய்திகள்
