கர்நாடகாவில் பரபரப்பு!.. டிஜிபி மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு!.. கண் இமைக்கும் நேரத்தில்... அரங்கேறிய சம்பவம்!.. திக் திக் நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக போலீஸ் டிஜிபியாக உள்ள ஆர்.பி.சர்மா தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தவறுதலாக விசையை அழுத்தியதால் திடீரென வெளியேறிய குண்டு அவரின் மார்பில் பாய்ந்தது.

கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய டிஜிபி-யாக இருப்பவர் ஆர்.பி.சர்மா (வயது 59). அம்மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான இவர், இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அவர் வீட்டில் இருந்த போது தன்னுடைய கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது தவறுதலாக துப்பாக்கியின் விசையை அழுத்தியதால் அதிலிருந்து வெளியேறிய 2 குண்டு, அவரின் மார்பிலும், கழுத்து பகுதியிலும் பாய்ந்தது.
உடனடியாக அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வரும் டிசம்பர் மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில் குண்டு பாய்ந்து காயமடைந்த அவர், ஆபத்தான கட்டத்தில் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தான் தவறுதலாக சுட்டுக்கொண்டதாக பெங்களூரு காவல் ஆணையர் கமல் பண்டிடம், டிஜிபி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
