'ஸ்பீக்கர்.. செல்லோ டேப்னு தானேனு நெனைச்சா'.. ஏர்போர்ட்டில் உறையவைத்த 'ஜகஜால' கில்லாடிகள்.. கைவிலங்கு போட்டு கூட்டிச் சென்ற போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவுக்கு தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும் தங்கக் கடத்தலை தடுப்பதற்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
இதன் நிமித்தமாக பயணிகளின் உடைமைகளில், ஆவணங்கள் இல்லாமல் மறைத்து வரப்படும் தங்கம் உள்ளிட்டவை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும் சோதனைகள் நிகழ்கின்றன. அந்த வகையில், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்களில் வந்த பயணிகளிடம் விமான புலனாய்வு பிரிவினர் நடத்திய சோதனையில் 653 கிராம் தங்கம், 10000 சிகரெட்டுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு, 4 பயணிகளிடம் இருந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் இவர்கள் தங்கத்தை கடத்துவதற்கு பயன்படுத்திய நூதன வழிமுறைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆம், இவர்களுள் ஒரு பயணி அடாப்டர்கள் மற்றும் செல்லோ டேப்பில் தங்கத்தையும், மற்ற மூவரும் ஸ்பீக்கர் மற்றும் டிராலி பேக் சக்கரத்தில் தங்கம் மற்றும் சிகரெட்டுகளையும் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்ததை அடுத்து இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.