'இனி ஆபீஸ் போனா வச்சு செய்வாங்க தான்'... 'ஆனா ஜாலியா போறோம்'... 7 வாரங்களுக்கு பின் துளிர்த்த நம்பிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | May 14, 2020 06:59 PM

கொரோனா அச்சத்தின் காரணமாக 7 வாரங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டுள்ளன.

Some return to work as lockdown slightly eases in England

ஐரோப்பா கண்டத்தில் உள்ள இங்கிலாந்தில் கொரோனாவின் ஆட்டம் அதிகமாகவே இருந்தது. அங்கு 2 லட்சத்து 29 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 33 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா வைரஸ் தரவு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த நிலையில், வீட்டில் இருந்து பணியாற்ற முடியாதவர்கள் நேற்றிலிருந்து பணிக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டது. இது கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைக்கும் பொருந்தும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். பணிக்கு செல்வோர் நடந்தோ, தங்கள் வாகனங்களிலோ, சைக்கிள்களிலோ செல்லலாம் எனவும் குறிப்பிட்டார். பொது போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதையடுத்து பணிக்கு செல்ல முடியாத லட்சக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியே வந்து பணிக்கு செல்ல தொடங்கினர். அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். பலரும் தங்களது நண்பர்களை பார்த்து மகிழ்ந்தனர். பல நாட்களுக்கு பிறகு வேலைக்கு செல்வதால், வேலை பளு அதிகமாக இருக்கும், ஆனாலும் எங்களுக்கு வேலைக்கு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என பலரும் கூறியுள்ளார்கள்.

இதனிடையே பணியிடங்களில் தூய்மை பராமரிக்கப்பட்டு, தனிமனித இடைவெளியும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.