"இதே மாதிரிதான் அப்பவும் சொன்னாங்க.. நடந்துச்சா?".. 'எப்பவும் இல்லாம' இப்படி பொங்கும் 'டிரம்ப்'.. இதுதான் காரணம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் நடப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதனிடையே அதிபர் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்த கருத்துக் கணிப்புகளை சி.என்.என். நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற கருத்துக் கணிப்பின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பின்படி, “தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாக்களிப்பீர்கள்” என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு 38 சதவீதம் பேர் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். டிரம்பை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பிடனுக்கு 14 % பேர் கூடுதலாகவும் வாக்களித்திருந்தனர். குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருள் 1 % பேர் மட்டுமே டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
கொரோனாவை அமெரிக்க அரசு கையாளும் நடைமுறை பல முறை விமர்சிக்கப்பட்ட சூழலிலும், ஜார்ஜ் ஃப்ளாய்டு விஷயத்தில் டிரம்பின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்ட சூழலிலும் வெளியாகியுள்ள இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்ப், “சி.என்.என்னின் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியானவை.
கடந்த தேர்தலில் கூட, என்னை விட ஹிலாரி அதிக ஆதரவிலான வாக்குகளை பெற்றிருந்ததாக கருத்துக்கணிப்பில் அந்நிறுவனம் கூறியிருந்தது பின்னாளில் பொய்த்துப் போனது!” என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்ற கருத்துக் கணிப்புகளில் டிரம்ப் பெற்ற மிகக்குறைவான வாக்கு சதவீதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
