‘அத’ பண்றதுக்காக ‘சீனா’ எதை வேணாலும் செய்யும்.. அடுத்த புது குற்றசாட்டை தூக்கிப்போட்ட டிரம்ப்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

உலகளவில் கொரோனா தொற்றுக்கு அதிகமான உயிரிழப்புகளை சந்திதுள்ள நாடு அமெரிக்கா. இதுவரை அந்நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சரியாக கவனம் செலுத்தவில்லை என குற்றசாட்டு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டிரம்ப், ‘வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் நான் தோற்க வேண்டும் என சீனா விரும்புகிறது. அதற்காக சீனா எதை வேண்டுமானாலும் செய்யும். சீனாவுக்கு வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் கடும் நெருக்கடி கொடுத்ததால் நான் தோற்க வேண்டும் என்றும், ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெல்ல வேண்டும் என சீனா நினைக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பரவல் குறித்து சீனா முன்னமே தெரிந்திருக்க வேண்டும் என்றும், அமெரிக்காவை குறிவைத்து வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது குற்றம் சாட்டியுள்ளார்.
