"அமெரிக்காவுக்கு வர விருப்பமில்லை..." "இந்தியாதான் எங்களுக்கு சேஃப்..." 'அமெரிக்கா' செல்ல மறுக்கும் '24 ஆயிரம் அமெரிக்கர்கள்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Apr 13, 2020 10:41 PM

இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்தபோது, பெரும்பாலானோர் இந்தியாவில் இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Americans who want to stay in India - refuse to go

கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை கண்டிராத மோசமான நிலையை அமெரிக்கா தற்போது சந்தித்து வருகிறது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களை அழைத்து வர அந்நாட்டு அரசு தனி விமானங்களை இயக்கி வருகிறது. சிறப்பு விமானங்கள் மூலமாக இதுவரை 50 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களை அழைத்துச் செல்ல அந்நாட்டு வெளியுறவுத்துறை சார்பில் தனி விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் செல்வதற்காக இந்தியாவில் தங்கியிருக்கும் சுமார் 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர்களில் 10 பேர்  மட்டுமே அமெரிக்கா செல்ல ஒப்புக் கொண்டனர். மற்றவர்கள் தாங்கள் இந்தியாவிலேயே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். சிலர் நிச்சயமற்ற மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அமெரிக்கர்கள் மட்டும் சுமார் 24 ஆயிரம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை அமெரிக்க மற்றும் இந்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.