உலகையே 'புரட்டி' போட்டுள்ள 'கொரோனா' வைரஸ்... 'எப்படி' உருவானது?... 'அமெரிக்கர்களின்' நம்பிக்கை 'இதுதான்'... வெளியாகியுள்ள 'ஆய்வு' முடிவு...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பற்றிய அமெரிக்கர்களின் நம்பிக்கையை அறிய ப்யூ ஆய்வு மையம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், வைரஸ் பாதிப்பால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்கர்களின் நம்பிக்கையை அறிய மார்ச் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 43% அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் இயற்கையாகவே பரவியிருக்கிறது எனவும், 29% அமெரிக்கர்கள் இந்த வைரஸ் ஓர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது எனவும் நம்புவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ் எதிலிருந்து தோன்றியது என்ற உறுதியான தகவல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது வரை இதற்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : #CORONAVIRUS #US #AMERICANS #LAB #COVID-19
