'எங்கேயும் இறைச்சி கிடைக்கல'... களத்தில் 'இறங்கிய' அமெரிக்கர்கள்... 'அதிகரிக்கும்' எண்ணிக்கையால் 'அதிர்ச்சியில்' ஆர்வலர்கள்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு எதிரொலியாக அமெரிக்க மக்கள் உணவுக்காக காடுகளிலும், கடலிலும் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் மிக மோசமான பாதிப்பை சந்தித்துவரும் அமெரிக்காவில் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு ஏற்பட்டுள்ள முடக்கம் காரணமாக இறைச்சி விற்பனையாளர்கள் தொழிலை நிறுத்தியுள்ளதால், கடைகளில் இறைச்சி வைக்கப்படும் இடங்கள் காலியாக உள்ளன. மேலும் வேலையிழப்பால் மக்கள் கையில் பணப்புழக்கமும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் பலரும் உணவுக்காக காடுகளுக்குள் புகுந்தும், கடல்களிலும் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் அரசு புள்ளிவிவரங்களின்படி, தற்போது வேட்டை உரிமம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் துப்பாக்கி விற்பனையும் அதிகரித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் வேட்டையாடுபவர்கள் பெரும்பாலான நேரத்தை காடுகளில் செலவழித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை வேட்டையாடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 2,55,000 ஆக குறைந்து வந்த நிலையில், தற்போதைய நிலை வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.