அமைச்சர்களே 'மாருதி சுசூகி' கார்ல போகும் போது... இயக்குனர்களுக்கு சொகுசு 'ஆடி' கார்களை வாங்கிய 'வங்கி...' 'சாமியே சைக்கிள்ள போகுது...' 'பூசாரிக்கு புல்லட் கேக்குதா? மொமெண்ட்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பிரச்னையால், சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது வங்கி இயக்குனர்கள் 3 பேருக்கு 'ஆடி' கார்களை வாங்கியுள்ளது.

கொரோனா பிரச்னையால், வங்கிகள் உட்பட பல்வேறு பொது நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் உத்தரவை பொருட்படுத்தாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி, அதன் நிர்வாக இயக்குனர் மற்றும் இரு மூத்த செயல் இயக்குனர்களுக்கு, 1.34 கோடி ரூபாய் செலவில் மூன்று, 'ஆடி' கார்களை வாங்கியுள்ளது.
மத்திய அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்டோர், மாருதி சுசூகி காரை பயன்படுத்தும் நிலையில், நிரவ் மோடியின், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ள, பஞ்சாப் நேஷனல் வங்கி, விலை உயர்ந்த ஆடி கார்களை, அதுவும் கொரோனா பிரச்னைக்கு இடையே வாங்கியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மற்ற செய்திகள்
