‘வெற்றிய கொண்டாடுங்க’.. ‘ஆனா இத மட்டும் பண்ண வேண்டாம்’.. தொண்டர்களுக்கு உத்தரவு போட்ட கெஜ்ரிவால்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி கொண்டாடத்தில் பட்டாசு வெடிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெற்றி கொண்டாட்டமாக கட்சி தலைமை அலுவலகங்களில் யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என தொண்டர்களுக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கெஜ்ரிவால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
