‘நான் மாரியம்மா வந்திருக்கேன்’ ‘10 வருஷமா மூடியிருந்த கோயில்’ திறக்கப் போன தாசில்தார் அருள் வந்து ஆடியதால் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Sep 30, 2019 01:48 PM

ராமநாதபுரத்தில் பல வருடங்களாக மூடியிருந்த கோயிலை, நீதிமன்ற உத்தரவின்படி திறக்க சென்ற தாசில்தார் அருள் வந்து சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tahsildar got emotional when he opened the temple

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் வாலிநோக்கம் அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தில் பழமையான திருவடி அய்யனார் மற்றும் உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் 10 வருடங்களாக கோயில் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இந்நிலையில் மூடியிருக்கும் கோயிலைத் திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதனை அடுத்து கோயிலைத் திறப்பதற்காக கடலாடி தாசில்தார் முத்துக்குமார் போலீசாருடன் சென்றுள்ளார். அப்போது கோயிலைத் திறக்கச் சென்ற தாசில்தார் முத்துக்குமார் திடீரென அருள் வந்து ‘நான் மாரியம்மா வந்திருக்கேன்.. மஞ்ச பால் கொடு’ என சாமி ஆடியுள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்த பெண்களும் அருள் வந்து சாமி ஆடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவருக்கு மஞ்ச பால் கொடுக்கப்பட்டது. அதனை கோயிலுக்குள் தெளித்து தாசில்தார் முத்துக்குமார் சாந்தமடைந்தார். பின்னர் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

Tags : #RAMANATHAPURAM #THASILDHAR #TEMPLE