கொரோனா தடுப்பு மருந்து 'இப்படி' தான் நாங்க ரெடி பண்றோம்...! பில் கேட்ஸ் தெளிவாக விளக்கும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்பில் கேட்ஸ் இன்று கொரோனா வைரஸிற்கு எம்மாதிரியான ஆண்டிபாடிகளை உருவாக்க வேண்டும் என்னும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்த கொரோனா வைரஸ் தொடங்கிய போதே சில ஆண்டுகளுக்கு முன் பில் கேட்ஸ் ஒரு நிகழ்ச்சியில் நாம் இனி நோய் தொற்றுகளால் அழியும் காலம் வரலாம் எனவும், அதிலிருந்து வெளிவர தடுப்பூசி கண்டுபிடிப்பு பணிகளில் ஈடுப்பட வேண்டும்' என ஒரு தீர்க்கதரிசி போல குறிப்பிட்டார். அதையடுத்து இந்த கொரோனா வைரஸ் பரவும் விகிதம் அதிகரித்தது முதல் பில் கேட்ஸ் என்ன சொல்வார் என பல விஞ்ஞானிகளும், உலக நாடுகளும் அவர் கூறுவதையும், அவரின் நடவடிக்கைகளையும் உற்றுநோக்கி வருகிறது.
இந்நிலையில் இன்று பில் கேட்ஸ் தனது யூடுப்பில் கொரோனா வைரஸிற்கு அவரது நிறுவனம் எவ்வகையான ஆண்டிபாடிகளை உருவாக்குகிறது என்னும் வீடியோவை பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில் பில் கேட்ஸ் கூறியது, 'இந்த உலகமே தற்போது போராடிக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதாகும். நாம் கண்டுப்பிடிக்கும் தடுப்பு மருந்து என்ன செய்ய வேண்டும்? நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டும் படியாக இருக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து வீடியோவில் ஒரு செயல்முறை விளக்கமாகவே கூறியுள்ளார் பில் கேட்ஸ். அதில் 'இது தான் கொரோனா வைரஸ் என்று எடுத்துக்கொண்டால் அதன் மேற்புறத்தில் இருக்கும் ஸ்பயிக் ப்ரோட்டீன் நம்முடைய உடல் செல்களில் நுழைந்து சில நிமிடங்களில் நமது உடலில் பில்லியனுக்கு மேற்பட்ட நகலை உற்பத்தி செய்கிறது. மேலும் அவை அனைத்தும் நமது நுரையீரலுக்கு சென்று, சில நாட்களுக்கு பிறகு அதன் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நாம் எப்படி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும். நாம் தயாரிக்கும் தடுப்பு மருந்தானது நம்முடைய உடலில் செலுத்திய பிறகு கொரோனா வைரசை தாக்கும் பல ஆண்டிபாடிகளை உருவாக்கவேண்டும்.
நாம் பலவகையான கொரோனா வைரஸை கொல்லும் ஆண்டிபாடிகளை உருவாக்க வேண்டும். முதலில் கொரோனா வைரஸின் ஒரு பகுதியை மட்டும் தாக்குமாறு தடுப்பு மருந்துகளை தயாரிக்கவேண்டும். மேலும் நாம் தயாரிக்கும் RNA மற்றும் DNA மாதிரிகளானது கொரோனா வைரஸின் ஸ்பைக்கை தாக்கும் வகையிலும் இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாதிரியான தயாரிப்புகளை தான் தடுப்பு மருந்துகளை தான் பில் கேட்ஸ் நிறுவனம், பல்வேறு நிறுவங்களுடன் கைகோர்த்து தயாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 7 பில்லியன் மக்களுக்கு இது பயன்படும் வகையில் இருக்கும் எனவும் குறிப்பிடுகிறார்.
தங்களின் நிறுவனம் உருவாக்கும் தடுப்பூசி முயற்சிகள் அடுத்த 18 மாதங்களில் மக்களுக்கு பயன்படும் தடுப்பூசிகளை கண்டிப்பாக வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார் இங்கு தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்துகளானது உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இருக்கும். அதன் மூலமாகவே இந்த கொரோனா வைரஸை அழிக்கமுடியும் எனவும் தன்னுடைய வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.