'இத நாம சீக்கிரமா பண்ணியாகணும்... அது மட்டும் தான் உலகத்த இயல்பு நிலைக்கு கொண்டுவரும்!'... ஐ.நா. சபையில் அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க உலகின் பெரும்பாலான இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது மக்கள் சமூக விலகலை கடைபிடிப்பதன் மூலமும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்வதன் மூலமும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் உறுப்பு நாடுகளான 50க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்கா நாடுகளுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :-
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி மட்டுமே உலகை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படும்.
தடுப்பூசி மட்டுமே கோடி கணக்கான உயிர்களையும், எண்ணற்ற டிரில்லியன் டாலர்களையும் காப்பாற்றக்கூடிய ஒரே கருவியாக இருக்கலாம்.
"2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதுபோன்ற தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்குத் தேவையான வேகத்தையும் அளவையும் அதிகரிக்க சர்வதேச பங்குதாரர்கள் இணக்கமான, ஒருங்கிணைந்த மற்றும் அணுகுமுறையின் மூலம் செயல்படுவதை உறுதிசெய்ய நமக்கு முயற்சி தேவை.
தொற்றுநோய்க்கு ஒரு விரிவான ஐ.நா மனிதாபிமான பிரதிபலிப்புக்காக மார்ச் 25 அன்று 2 பில்லியன் டாலர் நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இதுவரை அந்த தொகையில் 20 சதவீதத்தை திரட்டியுள்ளோம்.
உலக சுகாதார அமைப்பு மூலம், 47 ஆப்பிரிக்க நாடுகளை கொரோனா சோதனைகள் மூலம் தயார்படுத்த ஐக்கிய நாடுகள் சபையால் முடிந்தது என கூறினார்.
