‘உங்களை பார்த்தா வியப்பா இருக்கு’... ‘பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய பில்கேட்ஸ்’... ‘என்ன காரணம்?'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசும் மேற்கொண்டு வரும் செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை பாராட்டுகிறேன்.
ஒருபுறம் பொதுசுகாதாரத்தை பேணி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பொருளாதார ரீதியாக சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது.
ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுப்படுத்தியது, தனிமைப்படுத்துவதற்காக ஹாட்ஸ் பாட் பகுதிகளை கண்டறிந்தது, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோக்கிய சேது போன்ற செயலி உள்பட தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உங்கள் அரசு சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.