"மலிவு விலையில் மருந்து கிடைக்கும்..." "விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்..." 'பிரபல' தனியார் நிறுவனம் 'உறுதி...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தாங்கள் கண்டுபிடித்த தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல் அபோட் நிறுவனம் விரைவான கோவிட்-19 தொற்றை கண்டுபிடிக்கும் சோதனை கருவியை அறிமுகப்படுத்த உள்ளது.
உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி 37,815 பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்த நிலையில் தடுப்பூசியைத் கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி. ஃபிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்கா தனது தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் தடுப்பூசி தயாரிக்கும் திட்டமும் சோதனையில் உள்ளது. ரஷ்யா தனது தடுப்பூசியை விலங்குகள் மீது பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.
அந்த வரிசையில் அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தங்கள் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது. இந்த தடுப்பூசியின் சோதனை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், பயோமெடிக்கல் அட்வான்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (BARDA) என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஜனவரி 2020 முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த கொடிய வைரசை எதிர்த்துப் போராடுவதற்கு நிறுவனம் ஒரு தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. செப்டம்பருக்குள் சோதனைகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்தை குறைந்த விலையில் கிடைக்க தங்கள் நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.
மற்றொரு அமெரிக்க நிறுவனமான அபோட் லேபரேட்டரீஸ் நிறுவனம், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை கருவியை கண்டுபிடித்தள்ளதாக கூறியுள்ளது.