"அமெரிக்கா 'அந்த' விஷயத்துல எதையும் ஒழுங்கா பண்ணல"... "ஆனா சீனா சிறப்பா செஞ்சாங்க"... காரணம் சொல்லும் 'பில்கேட்ஸ்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Apr 27, 2020 06:03 PM

உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை லட்சங்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.

Billgates criticizes America for their steps against Corona

கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து மில்லியனரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். 'அமெரிக்கா தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஊரடங்கை தளர்த்துவது மேலும் பாதிப்பிற்கு வழி வகுக்கும். அதே போல வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வருவது கேள்விக்குறியாகி விடும். உலக சுகாதார அமைப்பு, சுகாதார வல்லுநர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறும் கருத்தை ஏற்று அமெரிக்கா நடப்பது நல்லது' என்றார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்தது முதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பியது என்றும், அவர்கள் இதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லையென்றால் கடும் விளைவுகளை சீனா சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய பில்கேட்ஸ், 'சீனாவில் வைரஸ் பரவ ஆரம்பித்ததும் மற்ற நாடுகளை போல சீனா அரசும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தங்களது நாட்டின் பொருளாதார நிலை வீழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது. வைரஸ் பரவலுக்கு பல நாடுகள் வேகமாக செயல்பட்டன. ஆனால் அந்த விஷயத்தில் அமெரிக்க மிக மோசமாக செயல்பட்டது என்பது தான் உண்மை. அதை பற்றி தற்போது சிந்தித்து கொண்டிருக்காமல் சிறந்த விஞ்ஞானத்தை பயன்படுத்துவதற்கான நேரமிது. அதன் மூலம் இதற்கான தடுப்பு மருந்தை நாம் இணைந்து கண்டுபிடிக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.