"ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை..." 'கொரோனா ஒரே நபரை பலமுறைத் தாக்க வாய்ப்பு...' 'தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உள்ள சிக்கல்கள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 25, 2020 09:18 PM

ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை என அமெரிக்க நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The only vaccine is unlikely to fight corona-study reported

கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமாகிய நபர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்புள்ளதா? என ஆராயப்பட்டதில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நமது உடலில் உள்ள கிருமிகளுக்கெதிராக போராடும் செல்களை நமது நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி செய்யும். இவை நோய் உண்டாக்கும் வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை செயலிழக்கச் செய்யும். பொதுவாக வைரஸ்கள் அவற்றின் ஜெனிட்டிக் கட்டுமானத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும். இதனால் பாக்டீரியாக்களை அழிக்கும் மருந்துகளைக் காட்டிலும் வைரஸ்களை அழிக்கும் மருந்துகள் வலுவற்றதாக உள்ளன.

கொரோனா வைரஸ் பலமடங்காக பிரிந்து செயலாற்றுவதில் சிறந்ததாக விளங்குகிறது. ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு சிகிச்சை பலனால் உயிர் பிழைத்தவர்கள்கூட இந்த SARS-CoV-2 மியூட்டன் வெர்ஷன் எனப்படும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு மியூடேஷன் கொண்ட கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது மற்ற உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசுக்கு மருந்துகாக அமைய வாய்ப்பில்லை. எனவே ஒரே தடுப்பு மருந்து கொரோனாவை போக்க வாய்ப்பில்லை.

அமெரிக்க நேஷன்ல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் அறிக்கைப்படி கொரோனா வைரஸ் பல முறை ஒருவரைத் தாக்கும் அபாயம் உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான் நாடுகளில் ஒருமுறை கொரோனா பாதித்து வீடு திரும்பியவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொரோனா மியூட்டேஷன் வெர்ஷன் வைரஸ்கள் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குணமடைந்தவர்களைக் கூட கூடுதலாக 14 நாட்கள் தனிமையில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.