'கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி ரெடி...' 'யார வச்சு டெஸ்ட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டோம்...' பரிசோதனை எப்போது நிறைவடையும் என தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸிற்கு தடுப்பூசியை கண்டுபிடித்த அமெரிக்கா அதனை பரிசோதிக்க ஒரு நபரை தேர்வு செய்துள்ளதாகவும் அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவேக்ஸ் அறிவித்துள்ள செய்தி அனைவருக்கும் ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது.

உலகம் முழுவதும் தற்போது பேசப்படும் ஒரே செய்தியாக இருப்பது கொரோனா வைரஸ். உலக அளவில் 15 லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களை பாதித்துள்ள இந்த கொரோனா வைரஸ் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கியுள்ளது. இன்னும் இந்த வைரஸிற்கு மருந்தோ, எந்தவித தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை என்பதே இதற்கு காரணம்.
கடந்த வாரம் அமெரிக்கா வெளியிட்ட செய்தியில் கோவிட் 19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது என தெரிவித்திருந்தனர். இதனிடையில் தற்போது கொரோனா வைரஸின் தடுப்பூசி சோதனைக்கான நபரை தேர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான நோவாவேக்ஸ்.
அமெரிக்காவின் மேரிலாண்டில் பேசிய நோவாவேக்ஸ் தலைமை விஞ்ஞானி டாக்டர் கிரிகோரி கிளென், இந்த தடுப்பூசியானது விலங்குகளிடம் பரிசோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது. அதனால் அடுத்தக்கட்டமாக தற்போது மனிதர்களிடம் பரிசோதனை நடத்த ஒரு நபரை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இந்த கொரோனா வைரஸானது மேல் பாகத்தில் முள் போன்ற அமைப்பினை கொண்டிருக்கும். அதனால் மனிதனின் உடலுக்கு செல்லும் இந்த வைரஸ் அதன் முள் போன்ற அமைப்பால் மனித செல்களை கெட்டியாக பிடித்து கொள்கிறது. அதன் பிடிமானத்தை தளர்த்துவதற்கான ஆன்டிபாடீஸ் தயாரித்து, அதனை பரிசோதிக்க உள்ள தடுப்பூசியில் செலுத்தி உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி பரிசோதனைகள் முடிய இரண்டு மாதங்கள் வரை ஆகும் என தெரிவித்த டாக்டர் கிரிகோரி மேலும் ஒரு அதிர்ச்சி தகவலையும் கூறிள்ளார். இந்த கொரோனா வைரஸானது மேலும் வேறு வடிவங்களில் உருமாறியும் இரண்டாம் கட்ட பரவலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அதனை தடுக்கும் வகையிலும் இந்த தடுப்பூசி உருவாக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
