'கொரோனா வைரஸ் தடுப்பூசி’... ‘எப்போது பயன்பாட்டுக்கு வரும்’... ‘உலக சுகாதார நிறுவனம் முதல்’... ‘அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் வரை’... ‘தரும் விளக்கம் என்ன?’!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Apr 02, 2020 08:31 PM

கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என அமெரிக்க தொற்று நோய் மருத்துவ நிபுணரும், கொரோனா தொற்று நோய் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் ஆண்டனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

Fauci said it will take 12 to 18 months to get coronavirus vaccine US

கொரோனா தடுப்பு மருந்து பணியில் முதற்கட்ட சோதனை நிறைவு செய்ததை அடுத்து, அண்மையில் அமெரிக்க மருத்துவ செயலாளர் அலெக்ஸ் இன்னும் சில தினங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்க தொற்று நோய் மருத்துவ நிபுணரான டாக்டர் ஆண்டனி ஃபாஸி அதற்கெல்லாம் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார். 2 மாதங்களில் கோவிட்-19-க்கு வாக்சைன் தயாராகி விடும் என்று அதிபர் ட்ரம்ப் கூறிய போதுகூட, டாக்டர் ஃபாஸி அவரைத் திருத்தி குறைந்தது ஒன்றரை ஆண்டு ஆகும் என்றார்.

டாக்டர் ஃபாஸி கூறியதைத்தான் உலக சுகாதார நிறுவனமும் கூறியிருந்தது. ஏனெனில், கொரோனா வைரஸின் மரபணு தொகுதி வரிசையை பயன்படுத்தி, அதன் இயக்கம், மனித செல்களில் எப்படி நுழைகிறது, நோயை எப்படி உருவாக்குகிறது என்பதை ஆய்வு செய்து மருந்து கண்டுப்பிடிக்கப்படவேண்டும். பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய  மருந்து, நான்கு கட்டங்களை அடையவேண்டும். முதல் கட்டத்தில் விலங்குகள் மீதும் மனிதர்கள் மீதும் சோதித்து பார்க்க வேண்டும், இரண்டாம் கட்டத்தில் தடுப்பு மருந்தின் திறன், பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட வேண்டும்.

மருந்து வெற்றி எனில், அந்த தடுப்பூசியானது, நோயை தடுக்கக் கூடியது என்பதோடு பாதுகாப்பானது என உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு உலக நாடுகள் உரிய விதிமுறைகளின் அடிப்படையில் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்க வேண்டும்.எனவே, ஆய்வுக்கான தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிகள் தொடர்ந்தாலும் ஒன்றிரண்டு மாதங்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என கருதக் கூடாது என்றும், குறைந்தது 18 மாதங்களாவது ஆகும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியதைதான டாக்டர் ஃபாஸி கூறி இருக்கிறார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 2,40,000 பேர்கள் வரை பலியாகும் அபாயம் இருக்கிறது. மேஜிக் புல்லட் இல்லை, மேஜிக் வாக்சைன் இல்லை. சமூக விலகலே ஒரே வழி, நம் நடத்தையின் மூலம், சுயக் கட்டுப்பாட்டின் மூலம்தான் கொரோனாவிலிருந்து மீள முடியும் என்று வெள்ளை மாளிகையில் அறிவித்த டாக்டர் ஃபாஸிக்கு மிரட்டல் வருவதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS #FAUCI #WORLD HEALTH ORGANISATION #VACCINE #US #AMERICA