இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 22, 2020 12:54 PM

1. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது

Tamil News Important Headlines Read Here For More April 22

2. தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது.

3. கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி நாளை மனிதருக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

4. ஊரடங்கு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27ஆம் தேதி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்குவதாக பேராயர் ஜார்ஜ் அந்தோணி தெரிவித்துள்ளார்.

6. மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் அலுவலக இல்லத்தில் பணியாற்றிய 2 பெண் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ளது.

7. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

8. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

9. கொரோனா தடுப்புப் பணியின் போது பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தால் மருத்துவம், காவல், உள்ளாட்சி, தூய்மைப்பணியாளர் உட்பட அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் ரூ 50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

10. அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

11.  கொரோனா பாதித்த நபரை சந்தித்ததால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவர் விரைவில் நலமடைய வாழ்த்துவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

13. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ கட்டமைப்புகளுக்காக 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.