இணையத்தை கலக்கும் 'நியூ ஃபிளெக்ஸ் சேலஞ்ச்'... 'சுளுக்கு' ஏற்பட்டால் கம்பெனி பொறுப்பாகாது...
முகப்பு > செய்திகள் > உலகம்By Suriyaraj | Jan 13, 2020 11:44 AM
நியூ ஃபிளெக்ஸ் சேலஞ்ச் (New flex challenge) என்ற புதிய சவால் ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. குப்புற படுத்தபடி கைகளை தரையில் ஊன்றாமல் எழுந்திருக்கும் இந்த சேலஞ்ச் சற்று சவாலானதாகவே உள்ளது.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் வரிசையில், “நியூ ஃபிளெக்ஸ்” என்ற புதிய சேலஞ்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சேலஞ்ச் விதிகளின் படி, தரையில் குப்புறப் படுத்து கைகளை, பின்புறமாக கட்டிக்கொள்ளவேண்டும். பின்னர், கைகளின் உதவி இல்லாமல் கால்களை உந்தித்தள்ளி தரையிலிருந்து மேலே எழுந்திருக்கவேண்டும்.
FLEXIN’ ON EM 🤯
University of Iowa gymnast Jax Kranitz might have started an epic new flex challenge that we absolutely will not be trying 😂
🎥: jax.kranitz pic.twitter.com/aWy66564GY
— thegistnews.ca (@thegistnewsca) January 8, 2020
உடல் வலு மற்றம் நெகிழ்வுத் தன்மையை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நியூ ஃபிளக்ஸ் சேலஞ்சில் ஏராளமானோர் ஈடுபட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
