‘கோச் பலாத்காரம் பண்ண முயற்சி பண்றாரு.. வெளில சொன்னா!!’.. ‘உதவுங்க ப்ளீஸ்’.. ‘கிரிக்கெட் பிரபலங்களிடம்’ புகார்!.. பரபரப்பு ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jan 03, 2020 02:34 PM

டெல்லியைச் சேர்ந்த நைனு ஷர்மா என்கிற பெண், ட்விட்டரில் வீரேந்தர் சேவாக் மற்றும் கவுதம் கம்பீர் இருவரின் ட்விட்டர் லிங்கில் முறையிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

coach is molesting,twitter user asks to sehwag and gambhir

அதில், ‘நான் ஒரு பெண் கிரிக்கெட்டெர். என்னுடைய பயிற்சியாளர் என்னை பாலியல் ரீதியான பலவந்தத்துக்கு உட்படுத்த முயற்சி செய்கிறார். இதுபற்றி நான் வெளியில் புகார் அளித்தால், என் பொதுவாழ்க்கையையே பாழாக்கிவிடுவேன் என்று மிரட்டுகிறார். எனக்கு உதவி செய்யுங்கள் ப்ளீஸ்’ என்று அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த இந்த 2 முன்னாள்

கிரிக்கெட் வீரர்களிடம் அப்பெண் முறையிட்டுள்ள இந்த தகவல் இணையத்தில் வெகுவேகமாக பரவி வரும் நிலையில், பாஜகவின் கிழக்கு டெல்லி எம்.பியாக பதவி வகிக்கும் கவுதம் கம்பீர் அப்பெண்ணிற்கு தன்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்தே, ‘உங்கள் நம்பரை கொடுங்கள்’என்று ரிப்ளை செய்து, பின்னர் அதனை டெலிட் செய்துள்ளார்.

நைனு ஷர்மா என்கிற பெண்ணின் ட்விட்டர் கணக்கை பொருத்தவரை 93 ஃபாலோயர்களே உள்ளனர். 9 பேரை மட்டும் அப்பெண் ஃபாலோ செய்வதாகவும் காட்டுகிறது. இதனால் இந்த கணக்காளரின் உண்மைத் தன்மை இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அப்பெண், தன் அடையாளத்தை மறைப்பதற்காகக் கூட போலி கணக்கின் மூலம் உதவி கேட்டிருக்கலாம் என்கிற கருத்துகளும் வெளியாகியுள்ளன.

Tags : #CRICKET #VIRAL #TWEET #HELP #WOMENSAFETY