“அடிச்சு நொறுக்கப்பட்ட ஃபுட் கவுண்ட்டர்.. பறந்த நாற்காலி!”... “ஆனாலும் கூலாக உட்கார்ந்து.. இவர் செஞ்ச காரியத்த பாருங்க”!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Jan 13, 2020 11:40 AM
வெளிநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விநோதம் அரங்கேறித்தான் வருகிறது. அப்படி ஒரு சின்சியர் சிகாமணி செய்த செயலும் தற்போது வைரலாகி வருகிறது.
கென் கெபாப் என்கிற சிட்சாட் உணவகத்துக்கு சென்ற ஒரு நபர் அங்குள்ள மேஜையில் அமர்ந்தபடி ஒருபுறம் ஹெட்போனை மாட்டிக்கொண்டும், இன்னொருபுறம் தான் வாங்கிய சிப்ஸை சாப்பிட்டுக் கொண்டுமிருந்துள்ளார். இதில் என்ன தவறு என்னவென்றால்? எதுவுமில்லைதான். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. திடீரென உண்டான வாக்குவாதம் முற்றிப்போய் இரண்டு கஸ்டமர்களும் அங்கிருந்த கடை ஊழியர்களும் ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டனர்.
நாற்காலியை உடைத்து, அடித்து ஒருவருக்கொருவர் தீவிரமாக தாக்கிக் கொண்டிருந்துள்ளனர். கஸ்டமர்களோ அங்கிருந்த உணவு கவுண்டரை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால், ‘இங்க இவ்வளவு பிரச்சனை நடந்துகொண்டிருக்கிறது. இங்க யார்ரா இவன் உக்கார்ந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டு இருக்கான்?’ என்பது போல், ஹெட்போனில் எதையே கேட்டுக்கொண்டு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார் 52 வயதான க்றிஸ்.
இதுபற்றி பேசிய க்றிஸ், ‘ஒரு கட்டத்தில், தனக்கு முன்னால் நடந்த இந்த களேபரத்தைப் பார்த்ததாகவும், ஆனாலும் சிப்ஸ் டேஸ்ட்டாக இருந்ததால் எழுந்து போக மனமின்றி என்ன நடந்தால் என்ன?’ என்று அங்கேயே உட்கார்ந்து சிப்ஸை சுவைத்துக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.