"தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதில் உச்சகட்டம் இதான்!"..'பால்காரரின் பலே ட்ரிக்ஸ்!'.. வைரலான இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகையே அச்சுறுத்தும் கொரோனாவை விரட்டும் முனைப்பில் உலக நாடுகள் ஈடுபட, ஆனால் இன்னொரு புறம் கொரோனாவின் கோர தாண்டவம் குறைந்த பாடில்லை.
எனினும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவும் பலர் முனைந்து வருகின்றனர். தற்போதைய நிலையில், தனிமனித இடைவெளியும், விழிப்புடன் வீட்டில் இருத்தலும், விலகி இருத்தலும்தான் நம் கையில் சோப்பு போட்டு கைக்கழுவுவதற்கு அடுத்தபடியான கொரோனா தடுப்பு முறைகள். இந்த நிலையில், அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்கான தொழில்களில் ஈடுபடுவோர்கள் சற்றே கூடுதலாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
அப்படித்தான், பால்காரர் ஒருவர் கடைபிடித்து வரும் தனிநபர் இடைவெளிக்கான உத்தி அசரவைத்துள்ளது. தன்னை நெருங்கி நின்று பால் வாங்கும் எவருக்கும் கொரோனா தொற்று தம்மாலும், அவரால் தமக்கும் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக, நீண்ட புனல் குழாய் மூலம் பாலை இந்த பால்காரர் ஊற்ற, குழாயின் மறுபுறம் வாடிக்கையாளர் பாலை பெற்றுக்கொள்கிறார். இந்த பால்காரரின் புத்திசாலித்தனம் இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக வலம் வருகிறது.