முன்னாள் காதலனை மாட்டிவிட 'பகீர்' புகாரளித்த பெண்,,.. விசாரணையில் வெளியான ஷாக்கிங் 'ட்விஸ்ட்',,.. ஒரு நிமிடம் தலை சுற்றிப் போன 'போலீசார்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயின் (Spain) நாட்டின் பெம்பிப்ரே (Bembimbre) என்னும் பகுதியை சேர்ந்த வெனசா கெஸ்டோ (Vanesa Gesto) என்ற பெண் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தனது முன்னாள் காதலரான இவான் ரிக்கோ (Ivan Rico) என்பவர், தனது வீட்டின் முன் வைத்து கருப்பு கார் ஒன்றில் தன்னைக் கடத்திச் சென்றதாகவும், தொடர்ந்து தனது பிறப்புறுப்பில் பசை கொண்டு ஒட்டி அரை நிர்வாண கோலத்தில் தன்னை விட்டுச் சென்றதாகவும் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, வெனசா கூறியதில் எதுவும் உண்மை இல்லை எனவும் சிசிடிவி மூலம் போலீசார் தெளிவுபடுத்தினர். சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து கத்தி மற்றும் பசை போன்ற பொருட்களை வெனசாவே வாங்கிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது.
அதே போல, இவான் ரிக்கோ கருப்பு காரில் தன்னை கடத்திச் சென்றதாக வெனசா தெரிவித்திருந்த நிலையில், அப்படி எதுவும் கார் வந்ததாக சிசிடிவியில் பதிவு செய்யப்படவில்லை. இதனால், வெனசா நாடகமாடியது தெரிய வந்தது. எந்த தவறும் செய்யாத ஒரு நபரை, கிரிமினல் வழக்கில் மாட்டிவிட வேண்டி வெனசா செய்த செயலுக்கு ஸ்பெயினிலுள்ள லியோன் நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
மேலும், 25,000 யூரோக்கள் இழப்பீடு தொகையாக வெனசா வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மற்ற செய்திகள்
