'8 ஆற்றல் மிக்க மருந்துகள் ஆராய்ச்சியில்...' 'பயன்பாட்டிற்கு' வர, '18 மாதங்கள்' ஆகும்... 'அதுவரை இது ஒன்றுதான் வழி...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 16, 2020 01:53 PM

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது என, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

8 potential drugs research-It takes 18 months to come into use

கொரோனா வைரஸ் தொற்றால், ஸ்பெயினில் இதுவரை, 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,812 பேர் உயிரிழந்துள்ளனர். 7,371 பேர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த வாரத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்ததால், ஊரடங்கு உத்தரவை, சற்று தளர்த்தி தொழிற்சாலைகள் மற்றும் கட்டமானத் தொழில்கள் இயங்க ஸ்பெயின் அரசு அனுமதி அளித்தது.

இருப்பினும் புதிதாக வைரஸ் தொற்றுடன் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருவதால் அந்நாட்டு அரசு கவலையடைந்துள்ளது. ஒரு புறம் நோய் கட்டுப்படுத்தப்பட்டாலும், மறுபுறம் நோய் பரவல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டுதான் இருக்கிறது. கடந்த, 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக, 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஐந்து நாட்களில் புதிதாக பாதிப்புக்கு உள்ளானோரில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாக உள்ளது.

இதனால், 'கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பாது' என, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார். இதே கருத்தை கடந்த வாரம் கனடா பிரதமரும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தற்போது, 8 ஆற்றல் மிக்க தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. அவை பயன்பாட்டிற்கு வர, 18 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதுவரை தடுப்பு நடவடிக்கை ஒன்று தான் தீர்வு.