'கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்'... 'கொரோனா கட்டுப்படுவதற்குள் அடுத்தடுத்த உயிரிழப்பு'... 'பீதியில் உள்ள நாட்டு மக்கள்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் கொசுவால் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொசு மூலமாக பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் (West Nile Virus) பாதிப்பு காரணமாக இந்த ஆண்டின் முதல் மரணம் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் தென் பிராந்தியமான அண்டலூசியாவின் இரண்டு நகரங்களான லா பியூப்லா டெல் ரியோ மற்றும் கொரியா டெல் ரியோ ஆகியவற்றில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவை இரண்டும் குவாடல்கிவிர் ஆற்றின் (Guadalquivir River) கரையில் அமைந்துள்ளன.
இந்த வைரஸ் பாதிப்புடன் சிகிச்சை பெற்றுவந்த 77 வயதான நபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே 82 வயதான பெண் ஒருவரும் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த இருவரைத் தவிர 23 பேர் இந்த பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் சராசரி வயது 60 எனவும், பாதிக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொசுக்களால் பரவும் நிலையில், வெஸ்ட் நைல் வைரஸை பரப்பும் கொசுக்கள் ஆற்றின் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. குலெக்ஸ் எனும் கொசுவால் பரவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பு விகிதம் 0.1 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.