“ப்ளீஸ் மக்களே!! இந்த நாட்டுக்கு... முக்கியமா இந்த 3 சிட்டிக்கு போய்டவே போய்டாதீங்க!” .. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்ன நாடுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினின் குறிப்பிட்ட 3 பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என யு.கே மற்றும் ஜெர்மனி நாடுகள் எச்சரித்துள்ளன.
ஸ்பெயினின் அரகோன், கேடலோனியா மற்றும் நவர்ரா உள்ளிட்ட பிராந்தியங்களில் அதிக கொரோனா கேஸ்கள் மற்றும் உள்ளூர் ஊரடங்கு காரணமாக இப்படியான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் பெரும்பாலான பிராந்தியங்களில் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெருமளவில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் ஸெபெயின் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
இதனிடையே ஜெர்மனியில் ராபர்ட் கோச் நிறுவனம், நாடு முழுவதும் கொரோனா கேஸ்கள் அதிகரிப்பதற்கான காரணம் அலட்சியம்தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்பெயினின் மேற்குறிப்பிட்ட 3 பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கடந்த செவ்வாய் அன்று ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.