'மிரட்டும்' கொரோனாவால் 'இடிந்து' நிற்கும் நாடு... '2 மாதங்களுக்கு' பிறகு... 'முதல்முதலாக' வெளிவந்துள்ள 'நம்பிக்கை' செய்தி...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 21, 2020 06:13 PM

இத்தாலியில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coronavirus Hope In Italy As Active Covid-19 Cases Drop

சீனாவின் வுஹான் நகரில் முதல்முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் 2 மாதங்களுக்குப் பின் இத்தாலியில் தற்போது கொரோனா பாதிப்புடன் உள்ளவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள இத்தாலி நோய்த் தடுப்பு மையம், "முதல்முறையாக இங்கு ஆரோக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது'' எனத் தெரிவித்துள்ளது. இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 486 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 1,81,228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24,114 பேர் உயிரிழந்துள்ளனர்.