'மீண்டும்' ஒரே நாளில் சுமார் '2000 பேர்' உயிரிழப்பு... ஸ்பெயினை 'மிஞ்சிய' பலி எண்ணிக்கை... அமெரிக்காவில் 'தொடரும்' சோகம்...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 2வது நாளாக தொடர்ச்சியாக சுமார் 2,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் செவ்வாய்க்கிழமை 1939 பேர் உயிரிழந்திருந்த நிலையில், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் உயிரிழப்பு 1,973 ஆக பதிவாகியிருந்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,965 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்பெயினில் கொரோனாவால் 14,555 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் உயிரிழப்பு எண்ணிக்கை ஸ்பெயினையும் கடந்துள்ளது. மேலும் இத்தாலியில் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 17,669 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் 86,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பொருளாதாரத்துக்காக கட்டுப்பாடுகளை முன் கூட்டியே தளர்த்தினால் வைரஸ் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
