'உச்சகட்டத்தை' அடைந்துள்ள 'கொரோனா' தாக்குதல்... 'இனி' படிப்படியாக... 'காலியான' நாடாளுமன்றத்தில் பேசிய 'பிரதமர்'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஸ்பெயினில் கொரோனாவின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் இன்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் இதுவரை வைரஸ் பாதிப்பால் 15238 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 152446 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினில் கொரோனாவின் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான எம்.பி.க்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் காலியாக காணப்பட்ட நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் பெட்ரோ சான்செஸ், கொரோனா தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்து விட்டதால், இனி அது படிப்படியாக குறையும் எனக் கூறி, அவசரநிலையை ஏப்ரல் 26ஆம் தேதி வரை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைக் கோரியுள்ளார். மேலும் 1918ல் ஏற்பட்ட ஸ்பானிஷ் புளூவிற்குப் பிறகு மனித குலம் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொரோனா வடிவில் சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.